ETV Bharat / state

போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் மகாராஜன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி!

சென்னை: அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமை காவலர் மகாராஜன் உருவப் படத்திற்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

போக்குவரத்து புலனாய்வு தலைமை காவலர் மகாராஜன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி

author img

By

Published : Apr 26, 2021, 9:37 PM IST

சென்னை அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுத் துறையில் பணியாற்றி வந்த தலைமை காவலர் மகாராஜன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 24ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தலைமை காவல் மகாராஜன் உருவப்படத்திற்கு, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மலர் தூவி மரியாதை செலுத்தினார். போக்குவரத்து கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, உள்ளிட்டோர் கலந்துகொண்டு மகாராஜன் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

கடந்த 12ம் தேதி தலைமைக் காவலர் மகாராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 24 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராக பணிக்கு சேர்ந்த மகாராஜன், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வுத் துறையில் பணியாற்றி வந்தார்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறில்லை - சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.