ETV Bharat / state

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகைக்கான விமானங்கள் ரத்து - கனமழை எதிரொலி

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வானிலை "ரெட் அலார்ட்" கொடுக்கப்பட்டு கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் பறக்க ரத்து செய்யப்பட்டது. பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

கனமழை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து

author img

By

Published : Nov 12, 2022, 10:36 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை மற்றும் ரெட் அலாா்ட் காரணமாக, சென்னை- மதுரை - சென்னை, மற்றும் தூத்துக்குடி - சென்னை ஆகிய 3 விமானங்கள் இன்று ரத்து. சென்னை - லண்டன் விமானம் 6 மணி நேரம் தாமதம். மேலும் திருச்சி, சீரடி, கோவா, மும்பை, ஹாங்காங் விமானங்களும் தாமதம். சென்னையில் இருந்து இன்று மாலை 5:10 மணிக்கு மதுரை செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், அதே போல் மதுரையிலிருந்து இரவு 8:30 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் தூத்துக்குடியில் இருந்து இன்று மாலை 5:30 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், வழக்கமாக லண்டனிலிருந்து அதிகாலை 5:30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து காலை 7:30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும்.

ஆனால் சென்னையில் தொடர்ந்து கனமழை காரணமாக மோசமான வானிலை நிலவுவதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நிறுவனம், இன்று காலையில் புறப்பட வேண்டிய விமானத்தை 6 மணி நேரம் தாமதமாக, இன்று பகல் 1:30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்படுவதாக, பயணத் திட்டத்தை மாற்றி அமைத்தது.

அந்த விமானத்தில் 297 பயணிகள் சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்தனர். அந்த பயணிகள் அனைவருக்கும் நேற்று இரவு, முன்னதாக தகவல் கொடுத்து விட்டதால் பயணிகள் அதற்கு தகுந்தவாறு, இன்று தாமதமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து, விமானத்தில் ஏறி லண்டன் சென்றனர்.

மேலும் சென்னையில் இருந்து திருச்சி, சீரடி, கோவா, மும்பை, ஹாங்காங் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்று கொண்டு இருக்கின்றன. பயணிகளுக்கு தாமதம், ரத்து பற்றிய தகவல்கள் முன்னதாகவே தெரிவிக்கப்படுவதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை.

இதையும் படிங்க: ரேஷன் துவரம் பருப்பில் முறைகேடா?.. மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.