சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் 55க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை இரண்டு காவலர்கள் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிக்கிசை பெற்று வந்தனர்.
இந்நிலையில், ஆய்வாளரின் ஓட்டுநர் தனஞ்செயன்(40), குற்றவியல் எழுத்தாளர் அழகு செல்வராணி(40), புலனாய்வுத் துறையை சேர்ந்த கஜேந்திரன்(55) ஆகிய மூன்று காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை சேலையூர் காவல் நிலையத்தில் ஐந்து காவலர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சக காவலர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல் நிலையதில் தொடர்ந்து பொதுமக்கள் புகார் அளிக்க வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.