தமிழ்நாட்டில் முதல் முறையாக ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று பாடங்களுக்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரையிலும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களும், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்களும் என மொத்தம் 20 லட்சத்து 77 ஆயிரம் மாணவர்கள் தேர்வை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இருந்து மட்டும், ஐந்தாம் வகுப்பு தேர்வை மூன்று லட்சம் மாணவர்களும், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை இரண்டரை லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர். மேலும், இவர்களுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கும் பணிகளை அரசுத்தேர்வுத்துறை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிஏஏ சட்டத்தை ஆதரித்து பேனா வழங்கியதால் பெரும் பரபரப்பு!