ETV Bharat / state

பட்டாசு வெடித்த இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது.. ஆவடி போலீசார் அதிரடி! - etv bharat crime news

Avadi Crime news: ஆவடியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட தகராறில் 2 பேரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

5 people who cut youths with sickles
இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 5 பேர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 9:30 AM IST

சென்னை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்றைய முன்தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆவடி அடுத்த வீராபுரம், புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர், சாலமன்19. இவரது நண்பர் இதே பகுதியைச் சேர்ந்த சதிஷ் (18).

இந்த நிலையில், தீபாவளி அன்று இரவு தனியார் பள்ளியின் பின்புறம் இருவரும் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, மது போதையில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் கத்தியால் சரமாரியாக அக்கும்பல் வெட்டியுள்ளது.

இதையும் படிங்க: ஆக்ராவில் ஹோட்டல் பணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது!

இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, இருவரை வெட்டிய 5 பேரும் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், பலத்த வெட்டு காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (22), விக்னேஷ்(21), தனுஷ்(21), மோகன்(24) மற்றும் தினேஷ்(18) ஆகியோர்தான் சம்பவத்தில் ஈடுபட்டனர் என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் நடந்த கொடூரம்..! காதல் விவகாரத்தில் இளைஞரை அடித்துக் கொன்ற ஐந்து பேர் கைது..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.