ETV Bharat / state

வேதாரண்யம் வெள்ளப் பள்ளத்தில் ரூ.100 கோடியில் மீன்பிடித் துறைமுகம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

author img

By

Published : Apr 26, 2022, 4:49 PM IST

வேதாரண்யம் தொகுதி, வானவன் மகாதேவி கிராமம் வெள்ளப் பள்ளத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகத்தின் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

’ வேதாரண்யத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகம் ’ - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: வேதாரண்யம் தொகுதி, வானவன் மகாதேவி கிராமம், வெள்ளப் பள்ளத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க மத்திய அரசு மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது, விரைவில் பணிகள் செய்து முடிக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ’வினாக்கள் விடைகள்’ நேரத்தில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் வெள்ளப் பள்ளத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆறு மாதமாக வேலை நடைபெறாமல் உள்ளது, இந்தப் பணிகளை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “வேதாரண்யம் தொகுதி வானவன் மகாதேவி கிராமத்தில், 112 நாட்டுப்புற படகுகளைக் கொண்டு 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் மேற்கொண்டு வருகின்றனர்.

தினசரி 2,000 முதல் 2,500 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டு அன்றைய தினமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வெள்ளப் பள்ளத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

கடந்த ஆட்சிக் காலத்தில் முறையாக அனுமதி பெறாததால் இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையில், ஏப்ரல் 21ஆம் தேதி மத்திய அரசின் அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளதால், பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் 110 பேருக்கு கரோனா!- ராதாகிருஷ்ணன்ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.