சென்னை புறநகர்ப் பகுதியிலுள்ள கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி ஆகியவை அப்பகுதி மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து மீன்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
பல ஆண்டுகளாக இந்த ஏரியில் மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது, ஏரியை குத்தகைக்கு கொடுத்துவிட்டதாக சிலர் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "கொரட்டூர் ஏரியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். தற்போது எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ஏரியை குத்தகைக்கு விட்டுள்ளனர்" என வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னை ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: காரணம் என்ன?