ETV Bharat / state

காணாமல் போன மீனவர்கள் - கதறி அழும் குடும்பத்தினர்..!

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, ஃபைபர் படகில் மீன் பிடிக்க சென்ற ஏழு மீனவர்கள் பத்து நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன மீனவர்களி்ன் குடும்பத்தினர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மீனவர்கள் குடும்பத்தினர்
author img

By

Published : Jun 16, 2019, 9:11 PM IST

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஜூன் மாதம் நான்காம் தேதி நந்தா என்பவருக்கு சொந்தமான இரண்டு என்ஜின் பொருத்தப்பட்ட பெரிய ஃபைபர் படகில் மீன் பிடிக்க ஆந்திர மாநிலத்திற்கு பால்ராஜ், துரை, நந்தா, புகழேந்தி, மதி, ஸ்டீபன் ராஜ், கருத்தகண்ணு ஆகிய 7 மீனவர்கள் சென்றனர். இவர்கள் பத்து நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.

அவர்களது தொலைபேசி எண்ணும் துண்டிக்கப்பட்டிருப்பதால் அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருக்கலாம் என்று மீனவர்களின் குடும்பத்தினர் பதறிப்போயுள்ளனர். வீடு திரும்பாததை நினைத்து மீனவர்களின் குடும்பத்தினர் கவலையில் வாடி வந்துள்ளனர். இந்நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களையும் கண்டுபிடித்து தரக்கோரி கண்ணீர் மல்க சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக அலுவலக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.

மீனவர்கள் குடும்பத்தினர் வேதனை

இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் துறையினர், காணாமல் போன ஏழு மீனவர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

Intro:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 7 மீனவர்கள் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றவர்கள் பத்து நாட்களாகியும் இதுவரை வீடு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் Body:

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த நான்காம் தேதி நந்தா என்பவருக்கு சொந்தமான 2 என்ஜின் பொருத்தப்பட்ட பெரிய பைபர் படகில் மீன் பிடிக்க ஆந்திர மாநிலத்திற்கு பால்ராஜ், துரை, நந்தா, புகழேந்தி, மதி, ஸ்டீபன் ராஜ், கருத்த கண்ணு, ஆகிய 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்
மீன் பிடிக்க சென்றவர்கள் பத்து நாட்களாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை என்றும் அவர்கள் வைத்திருந்த தொலைபேசி துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து இருக்கலாம் என்றும் உடனே காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் அலுவலகத்தில் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் காணமல் போன மீனவர்களின் தமிழக அரசு மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் கடலோரக் காவல் படையினர் படையினர் ஆகியோர் தலையிட்டு காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் என்றும் உடனடியாக மாயமான மீனவர்கள் குறித்து அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து தரக்கோரியும் காணமல் போன மீனவர்களின் உறவினர்கள் நேற்று இரவு கண்ணீர்மல்க சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக அலுவலக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர் பின்னர் அங்கிருந்த காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.Conclusion:காசிமேடு மீன்பிடி துறைமுக அலுவலக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர் பின்னர் அங்கிருந்த காசிமேடு மீன்பிடி துறைமுக காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.