நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 11ஆம் தேதி அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இரண்டு விசைப்படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அதிலிருந்த சிவகுமார், சிவராஜ், அகத்தியன் உள்ளிட்ட 23 மீனவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்கள் கடந்த 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். முதற்கட்டமாக 23 மாணவர்களில் 18 நபர்கள் இன்று (நவம்பர் 27) தாயகம் திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்த மீனவர்கள், எங்களைக் கைதுசெய்த இலங்கை கடற்படை எந்தத் தொந்தரவும் அளிக்கவில்லை என்றனர். மேலும் பிடிப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
எஞ்சியுள்ள ஐந்து மீனவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரண்டு பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாகையில் 23 மீனவர்கள் கைது!