ETV Bharat / state

அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

சென்னை: நாளை, நாளை மறுநாளில் கேரள கடலோரப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fishermen do not go to the Arabian Sea and Lakshadweep due to the Hurricane winds

author img

By

Published : Jan 11, 2021, 2:34 PM IST

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இலங்கை, குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (ஜனவரி 12) தென் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை, புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

தென்கிழக்கு அரபிக்கடல் ,லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புவனகிரி (கடலூர்) 11 செ.மீ., பரங்கிப்பேட்டை (கடலூர்) 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜனவரி 12, 13 தேதிகளில் கேரள கடலோரப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுப் பகுதிகள், சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’சாரல் மழை... வௌவால் தொல்லை’: கொத்துக் கொத்தாகப் பாழாகும் திராட்சைப்பழங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.