சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த மலைக்கனி, சிவக்குமார் என்பவர்களுக்குச் சொந்தமாக ஸ்ரீபெரும்புதூர்- குன்றத்தூர் சாலையில் முறையே மரக்கிடங்கு, நெகிழிக் கதவுக் கடைகள் உள்ளன. இந்த இரு கடைகளும் ஊரடங்கு காரணமாக மார்ச் 24ஆம் தேதிமுதல் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்று நள்ளிரவு மரக்கிடங்கில் திடீரென தீப்பற்ற தொடங்கியுள்ளது. அதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் நிலையம், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பூவிருந்தவல்லி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடினர்.
தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் அம்பத்தூர், விருகம்பாக்கம், ஜெ.ஜெ. நகர் பகுதிகளிலிருந்து கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 2 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
இந்தத் தீவிபத்தில் இரு கடைகளிலும் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.
இதையும் படிங்க: மனைவி, குழந்தையை தீ வைத்து கொன்ற கணவர்