சென்னை எம்ஜிஆர் நகர் சோழன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு உஷா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி உஷா மக்களுக்கு குறி சொல்லும் வேலை செய்து வந்தார்.
உஷா, கடந்த 15ஆம் தேதி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக புடவையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் தீ பரவியுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்தில் படுகாயங்களுடன் கிடந்த உஷாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த உஷா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தீவிபத்து குறித்து எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் சொகுசு பேருந்தில் திடீர் தீ !