ETV Bharat / state

தனியார் குடோனில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் - fire accident

சென்னை: தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ருபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

தனியார் குடோனில் தீவிபத்து
author img

By

Published : Jun 30, 2019, 3:10 PM IST

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பு. இவர் பிரபல நிறுவனம் ஒன்றின் டீலராக இருந்து வருகிறார். இதற்காக அதே பகுதியில் குடோன் வைத்து அந்நிறுவனத்தில் பொருட்களை மொத்தமாக வாங்கி தினமும் வடசென்னை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

இந்த குடோனில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், குடோனில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றுவிட்டனர். அப்போது, குடோனில் இருந்து புகைமூட்டம் வெளியானதால், அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து கொருக்குப்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஏழுக்கும் மேற்பட்ட வண்டிகளில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தனியார் குடோனில் தீவிபத்து

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பின்னர் தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Intro:தண்டையார்பேட்டையில் தனியார் குடோனில் திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுBody:சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பு இவர் பிரபல I. T. C. நிறுவனத்தின் டீலராக இருந்து வருகிறார் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் குடோன் வைத்து பிஸ்கட், சிப்ஸ், கோதுமை, உப்பு, சிகரெட், போன்ற I. T. C. நிறுவனத்தின் பொருட்கள் மொத்தமாக வாங்கி இங்கு தினமும் வடசென்னை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப் பட்டு வருகிறார் இந்த நிறுவனத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்த நிலையில் குடோனில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர் திடீரென்று குடோனில் தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டமாக வந்ததால் உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கும் மற்றும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர் தகவலறிந்து கொருக்குப்பேட்டை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, உயர்நீதிமன்ற உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7க்கும் மேற்பட்ட வண்டிகளில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தீவிபத்து ஏற்பட்ட குடோனில் அனைத்தும் உணவுப் பொருட்கள் இருந்ததால் தீ அணைக்கப்பட்ட பிறகும் புகைந்து கொண்டே இருந்தது புகைமூட்டம் அதிகமாகவே உள்ளுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் குடோனில் பின்பக்கம் இருந்த ஜன்னலை உடைத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.Conclusion:தண்டையார்பேட்டையில் தனியார் குடோனில் திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.