ETV Bharat / state

Viduthalai Sigappi: பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்கு! - Hindu Gods allegation

இந்து மத கடவுளை பற்றி இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

author img

By

Published : May 9, 2023, 11:30 AM IST

சென்னை: பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்து வருபவர், சுரேஷ். இவர் நேற்று (மே 8) சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், "இந்து மத கடவுள்களான ராமர், சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயர் போன்றோரை இழிவுபடுத்தும் வகையில் ஒருவர் பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ இந்து மதத்தினரை மன வேதனை அடையச் செய்யும் நோக்கில் உள்ளது. சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படும் நோக்கில் வீடியோ அமைந்திருக்கிறது. இந்த வீடியோவில் இந்து மத கடவுள்களை பற்றி கொச்சையாக பேசிய நபரை பற்றி ஆராய்ந்தபோது, கவிஞரும், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி என்பது தெரிய வந்தது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அபிராமபுரம் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள முத்தமிழ் பேரவை ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், விடுதலை சிகப்பி என்பவர் இவ்வாறு பேசி உள்ளார்" என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் கவிஞரும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி மீது கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல், எந்த ஒரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திராவிட சித்தாந்தம் காலாவதியா? ஆளுநரின் பேச்சுக்கு முதலமைச்சர் பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.