சென்னை: அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் சந்தித்து, இலங்கை தமிழர் நலன்காக்க திராவிட முன்னேற்றக் கழக பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் சார்பில் முதற்கட்டமாக ரூ.11 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், மாமன்ற நிலைக்குழு தலைவர் என். சிற்றரசு, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந. இராமலிங்கம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:‘ராகுல் காந்தி காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும்’ - எல். முருகன்