சென்னை: மூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் (87), அகவை மூப்பின் காரணமாக நேற்று சென்னையில் இயற்கை எய்தினார். இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில், பூத உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் ஔவை நடராசனின் தமிழ்ப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த உதயநிதி