ETV Bharat / state

படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு

OTT பிரச்சனையில் எந்த சங்கமும் தயாரிப்பாளரை பாதிக்கும் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியாது என தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

producer
producer
author img

By

Published : Apr 27, 2020, 10:22 AM IST

Updated : Apr 27, 2020, 12:36 PM IST

திரைப்படத்தை ஆன்லைனில் (OTT- Over The Top, அதாவது, திரைப்படங்களை வழக்கமான முறைப்படி அல்லாமல், இணையம் வழியே வெளியிடுவது) வெளியிடுவது குறித்து கடந்த சில நாள்களாக திரைத்துறையில் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, தியாகராஜன், சித்ரா லக்ஷ்மணன், பெப்சி சிவா, இயக்குநர் மனோபாலா, சுரேஷ் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ”திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.

producer
தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டறிக்கை

அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன்வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பிரச்னைகள் பெரிய நடிகர்கள்-இயக்குநர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.

இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

இந்தி, தெலுங்கு, மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கரோனா லாக் டவுன் சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள்.

இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடப்படுவதன் மூலம் திரையரங்கில் வெளியாகக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவற்றை சரியான முறையில் வெளியிடவும் முடியும்.

பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள நாம் அனைவரும் வரவேற்று, மேலும் இனி வரவிருக்கும் சூழ்நிலையில் வெளியிட இயலாமல் முடங்கியுள்ள பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கும் கோர வேண்டும்.

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்பதை, தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரைப்படத் துறை வளர்ச்சியடைய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து விவாதித்து தமிழ் சினிமா சிறப்பாகச் செயல்பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated : Apr 27, 2020, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.