ETV Bharat / state

சினிமா படப்பிடிப்பில் ஆட்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை! - சினிமா படப்பிடிப்பு

சென்னை: சினிமா படப்பிடிப்பில் ஆட்களின் எண்ணிக்கையை 100ஆக உயர்த்த வேண்டும் என ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

ஆர்கே செல்வமணி
ஆர்கே செல்வமணி
author img

By

Published : Sep 7, 2020, 7:12 PM IST

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் உறுப்பினர்கள் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.செல்வமணி, சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த காரணத்திற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

மேலும், படப்பிடிப்பு நடத்த 75 பேர் வரை அனுமதிக்கப்பட்டு உள்ளதை 100 பேராக அதிகரிக்க வேண்டும். திடீரென அனுமதி வழங்கியதால் சிறிய படங்கள் மட்டுமே தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

தற்போது 60 படங்கள் பாதியில் நிற்கிறது. ஆகையால் 100 பேராக அனுமதித்தால் மட்டுமே அனைத்துப் படங்களும் படப்பிடிப்பை தொடங்க முடியும். ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது யாருக்கும் பாதிப்பு இல்லாம் வெளியே வர வேண்டும். திரையரங்கம், தயாரிப்பாளர்கள் இருவரும் பாதிக்காத வகையில் ஓடிடியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.