கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டன. கரோனா இரண்டாவது அலை குறைந்து வந்ததால் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
மேலும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்பில் தொடங்கப்படுகிறது. அப்பொழுது பாதுகாப்பாக மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் நரேஷ் ஆகியோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டனர்.
மேலும் 'இல்லம் நோக்கி கல்வி'த் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் கேட்டுள்ளனர். கரோனா தொற்று பாதிப்பிற்கு பின்னர் பள்ளிகளை எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.