ETV Bharat / state

தரமற்ற குளிர்பானங்கள் விற்பனை: உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி சோதனை

author img

By

Published : Sep 21, 2021, 8:10 PM IST

குளிர்பானம் குடித்து இரண்டு சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்ததால், குளிர்பான விற்பனை செய்யப்பட்ட கடையில், உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

உணவு பாதுகாப்பு துறை  உணவு பாதுகாப்பு துறை சோதனை  தரமற்ற குளிர்பானங்கள்  புதுவண்ணாரப்பேட்டையில் தரமற்ற குளிர்பானங்கள் விற்பணை  சென்னை செய்திகள்  fassi ride  fassi ride in the shops at Vannarpet  chenani vannarpet fassi ride  fassi  chennai news  chennai latest news
தரமற்ற குளிர்பானங்கள்

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் இரண்டு சிறுவர்கள், கடையில் நெகிழிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கிக் குடித்து ரத்த வாந்தி எடுத்துள்ளனர்.

இதையடுத்து சிறுவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

ரத்த மாதிரிகள் பரிசோதனை

அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்து, குளிர்பானத்தின் தரத்தை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

மேலும் சிறுவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, அதில் என்ன வகையான ரசாயனம் உள்ளது என்பதை கண்டறிய வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதே குளிர்பானத்தைக் குடித்து, சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது மேலும் ஒரு சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு

இந்நிலையில் சிறுவர்கள் குடித்த குளிர்பானம் விற்பனை செய்யப்பட்ட கடையில், உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், நியமன அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடையில் இருந்த குளிர்பானங்கள், காலாவதியான குளிர்பானங்கள், மாவு பாக்கெட்கள் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஸ்குமார் கூறியதாவது, 'குளிர்பானம் குடித்து சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்த நிலையில், சிறுவர் குடித்த குளிர்பானத்தை பரிசோதனைக்காக ஏற்கெனவே பறிமுதல் செய்துவிட்டோம். மேலும் தற்போது கடையில் ஆய்வு செய்து காலாவதியான குளிர்பானங்கள், காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள், மாவு பாக்கெட்களைப் பறிமுதல் செய்துள்ளோம்.

சிறுவர்கள் குடித்த குளிர்பானத்தைத் தயாரிக்கும் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம், எரா ஹல்லி கிராமம், பொத்தாபுரம் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த குளிர்பானத்தின் மொத்த வியாபாரக் கடை செங்குன்றத்தையடுத்த அலமாதி பகுதியில் அமைந்துள்ளது.

கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட அலுவலர்களுக்கு சிறுவர்கள் குடித்த குளிர்பானம் தயாரித்தபோது, தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களைப் பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளோம்.

ரூ.10இல் இத்தனை ஆபத்தா

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறையின் அனுமதி பெறாமல் ரூ.10 என்ற விலையின் அடிப்படையில் பல்வேறு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த குளிர்பானங்கள் குறிப்பாக சிறிய அளவிலான கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் வைத்தே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

முறையான அனுமதி பெறாத குளிர்பானம் மற்றும் உணவுப்பொருட்களை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை மூலமாக கேட்டுக்கொள்கிறோம்.

குறைந்த விலையில் உணவுப்பாதுகாப்புத்துறையின் அனுமதியில்லாமல் விற்பனை செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கடைகாரர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும் புதியதாக ஒரு குளிர்பானமோ, பொருளோ விற்பனைக்கு வந்தால் அதனை உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து கடைக்காரர்கள் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்தால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

மேலும் இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யும் விநியோகஸ்தர்கள் மீது காவல் துறை மூலமாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிறுவனுக்கு ரத்த வாந்தி: தரமற்ற குளிர்பானங்களால் தொடர் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.