ETV Bharat / state

‘மத்திய பட்ஜெட் ஒரு ஏமாற்றம்’ - தமிழக விவசாயிகள் - நிதியமைச்சர்

2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் இன்று வெளியிட்ட நிலையில் அவைகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 1, 2023, 8:31 PM IST

Updated : Feb 1, 2023, 9:37 PM IST

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று (பிப்.10) மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. வருடந்தோறும் மத்திய நிதி அமைச்சகம் பிப்ரவரி மாதம் அந்த நிதியாண்டுக்குரிய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.

இதில், அரசாங்கத்தின் அந்த ஆண்டிற்கான வரவு மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கான அறிக்கையை அளிப்பது அரசின் கடமையாகும். பட்ஜெட் பிரிவானது, அனைத்து ஒன்றிய அமைச்சகங்கள், யூனியன் பிரதேசங்கள், தன்னாட்சி அமைப்புகள், துறைகள் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு அடுத்த ஆண்டின் மதிப்புகளின்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. பட்ஜெட்டில் குறிப்பாக வரித் திட்டங்கள் மற்றும் விவசாய நலன் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்படும். எனினும் இந்த ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையில் விவசாயம் சார்ந்த எந்த ஒரு நல்ல அறிவிப்பு இல்லை என விவசாயிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட்: இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி. அய்யாக்கண்ணு, "நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையின் போது, இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு நல்ல ஒரு ஊக்கத்தை கொடுக்கும் என்றார். ஆனால், இன்றைய நிதிநிலை அறிக்கையில் அப்படியொன்றும் இல்லை.

பி. அய்யாக்கண்ணு
பி. அய்யாக்கண்ணு

கோதாவரி-காவேரி நதிகள் இணைப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று நினைத்தோம். அதுவும் இல்லை", என்றார். விவசாயிகள் கடனாளியாக பிறக்க வேண்டும், கடனாளியாக வாழ வேண்டும், கடனாளியாக இறக்க வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது என குமுறிய அய்யாக்கண்ணு, "மொத்தத்தில் இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட்" என தெரிவித்தார்.

வேளாண் கடனுக்கு வட்டியை குறைக்க வேண்டும்: தொடர்ந்து விவசாயிகள் சங்க கூட்டு இயக்கத்தின் தலைவர் காவிரி தனபாலன் கூறுகையில், "1 கோடி பேரை இயற்கை விவசாயத்திற்கு திருப்ப முயற்சி எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்கதக்க ஒன்றாகும். ரூ. 20 லட்சம் கோடி பயிர்க் கடன் வழங்குவதற்கான அறிவிப்பு நல்லது என்றாலும், அதற்கான வட்டியை பற்றி கூறவில்லை. வேளாண் கடனுக்கு வட்டியை குறைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

காவிரி தனபாலன்
காவிரி தனபாலன்

சிறு, குறு, தொழிலுக்கு பட்ஜெட் ஆதரவு அளிக்கவிவில்லை. எனவே அவைகள் கார்ப்ரேட் கம்பெனிகளின் கீழ் இயங்க வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்தார். "குறிப்பாக விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணியக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவையும் பட்ஜெட்டில் இடம்பெறாதது பெரிய ஏமாற்றம் அளிக்கிறது" என தனபாலன் கூறினார்.

பிரதமரின் உழவர்கள் வெகுமதி திட்டம்: காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறுகையில், "இந்திய ஒன்றிய கோவர்தன் மற்றும் பிரணாம் திட்டங்களை பாராட்டுகின்றோம். வேளாண் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கான குளிர்சாதன கிடங்குகள் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட இருக்கிறது என்ற அறிவிப்பினையும் வரவேற்கின்றோம். அது வட்டளவில் இருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். அதே வேளையில் பிஎம் கிசான் பிரதமரின் உழவர்கள் வெகுமதி திட்டம் 2018ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது.

சுவாமிமலை விமல்நாதன்
சுவாமிமலை விமல்நாதன்

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்கான நிதியை ஆண்டிற்கு ரூ.6000 என்பதை உயர்த்த வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக உழவர்கள் நாங்கள் வலியுறுத்தி வந்தோம்" என கூறிய அவர் “அந்த திட்டத்தை பற்றிய அறிவிப்பு அந்நிதியினை ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தி தர வேண்டும் என்ற உழவர்களுடைய கோரிக்கைகள் பிரதமரின் வெகுமதி திட்ட நிதி உதவியை இந்தியாவில் உள்ள சுமார் 2 கோடி உழவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.

அவர்களும் இதனுடைய பயனாளிகளாக ஆக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை இந்த அரசு பரிசீலிக்கவில்லை வருத்தம்மளிக்க கூடியது. இந்தியா விடுதலைப் பெற்று 75 ஆண்டுகாலம் கடந்தும் இந்திய வரலாற்றில் ஒரு முறை கூட வேளாண்மைக்கு என தனி நிதி நிலை அறிக்கையை இதுவரை இருந்த எந்த ஒரு அரசும் வெளியிடவில்லை. இந்த பட்ஜெட் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்.

வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை எதுவும் கூறவில்லை என கூறிய விமல்நாதன் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படாமல் அதற்குத் தேவையான நிதி எதையும் ஒதுக்கீடு செய்யாமல் இந்த பட்ஜெட்டில் அதைப் பற்றிய அறிவிப்பும் இல்லாமல் இருப்பதும் வருத்தம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது என கூறினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.89,400 கோடி என்ற நிலையில், அதைவிட 32 விழுக்காடு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பேசிய என். வீரசேகரன், மாநில செயலாளர், பாரதிய கிசான் சங்கம், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்பது கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பொருளாதார ரீதியில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே இந்த திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் அனைத்து கிராமப்புற மக்களுக்கும் வேலை கிடைக்கும்" என்றார்.

என். வீரசேகரன்

இதையும் படிங்க: பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு : தேர்தல்களை குறிவைக்கும் பாஜக அரசு!

Last Updated : Feb 1, 2023, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.