சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக். 18) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 16வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை காண்பதற்கு, உள்ளூர் மட்டுமின்றி மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்துதும் ரசிகர்கள் சென்னைக்கு படையெடுத்து உள்ளனர்.
ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரானது, வரும் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. உலக கோப்பை தொடரின் 16வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த ஆட்டத்தை காண்பதற்கு, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு படையெடுத்து வந்து உள்ளனர்.
மேற்கு இந்திய தீவுகளில் இருந்து சென்னைக்கு வந்து உள்ள இந்திய வம்சாவளியான அமர்லால் பிரசாத் கூறுகையில், "1912 ஆம் ஆண்டே என் முன்னோர்கள் மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்றனர். நான் மேற்கு இந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டின் நேவியில் கிரிக்கெட் வீராரக இருந்தேன்.
கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, அதில் எந்த நாட்டின் அணி சிறப்பாக திறமையை வெளிப்படுத்துகிறதோ, அந்த அணியை பாரட்டுவது தான் சிறப்பான ரசிகர் செயலாகும். சென்னையில், இந்த போட்டிக்காக வந்துள்ளேன். மேலும் இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பையில் பங்கு பெறாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் இம்முறை, நியூசிலாந்து திறமையாக விளையாடி கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
இங்கிலாந்து ரசிகர் பீட்டர் கூறுகையில், "நான் இங்கிலாந்து நாடில் வேல்ஸ் பகுதியில் இருந்து வருகிறேன். நான் பொதுவான கிரிக்கெட் ரசிகர் தான். இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை என்பது சரி தான். ஆனால் இன்னும் லீக் போட்டியானது முடிவடையவில்லை. இம்முறை உலகக் கோப்பையை வெல்வதற்கு, நியூசிலாந்து, தென் ஆப்பரிக்கா, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்தார்.
நியூசிலாந்து ரசிகர் ஜேஸ் கூறுகையில், "ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில், யாருக்கு வெற்றி என்பது போட்டி முடிவில் தான் தெரியும். மேலும் இரு அணிகளும் இங்கிலாந்தை வென்று உள்ளது. கேன் வில்லியம்சன் இல்லாதது, அணிக்கு பின்டைவு என்பது இல்லை.
ஒருவர் தான் அணி என்று கூற முடியாது. நியூசிலாந்து வீரர்கள் அனைவரும், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள் தான். மேலும் சென்னையில் இரு அணிகளும் மோதும் போட்டியை காண்பதற்கு மிகவும் ஆவலுடன் நியூசிலாந்தில் இருந்து வந்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து வந்த ரசிகர் வரகுணன் கூறுகையில், "இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும் ஏனென்றால் இந்திய அணி மேல வர ஒரு வாய்புப்பாக அது அமையும். மேலும், நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் பந்து வீச்சாளர்கள் அனைவரும் தங்களின் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : Mahua Moitra : பாஜக எம்பி நிஷிகாந்த் துபேவுக்கு சம்மன்... மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு உத்தரவு!