ETV Bharat / state

லியோ‌ டிரெய்லர் கொண்டாட்டம்.. சென்னை ரோகிணி தியேட்டரை சூறையாடிய ரசிகர்கள்! - actor vijay

Chennai Rohini theater attack: சென்னை ரோகிணி திரையரங்கில் லியோ படத்தின் டிரெய்லர் வெளியீடு கொண்டாட்டத்தின் போது, ரசிகர்கள் திரையரங்கில் இருந்த இருக்கைகளை உடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோகிணி திரையரங்கை சூறையாடிய ரசிகர்கள்!
ரோகிணி திரையரங்கை சூறையாடிய ரசிகர்கள்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 10:30 PM IST

சூறையாடப்பட்ட ரோகிணி தியேட்டர் இருக்கைகள்

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.

இம்மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும், இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று லியோ படத்தின் டிரெய்லர் சன் டிவி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.

இந்நிலையில் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டுக்காக தமிழகம் முழுவதும் உள்ள சில திரைப்படங்களில் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம் நடைபெற்றது.

அப்போது படத்தின் டிரெய்லரை கண்டு ஆடிப்பாடி கொண்டாடிய ரசிகர்கள், திரையரங்கின் இருக்கைகள் அனைத்தையும் முற்றிலும் சேதப்படுத்திய வீடியோக்களும், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் சிலர் காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும், திரையரங்கில் டிரெய்லர் வெளியிட்ட ரோகிணி திரையரங்கு நிர்வாகத்தை கண்டித்தும், இதை போன்ற செயல்கள் தேவையற்ற பிரச்னையை உண்டாக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர். திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளும் சேதமடைந்துள்ளது வீடியோவில் தெரியவந்தது.

ரோகிணி திரையரங்கில் இதைப்போன்று அசம்பாவிதம் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. டிரெய்லர் வெளியிட்டிற்கே இப்படி என்றால், படம் வெளியாகும் நாளன்று ரசிகர்களின் அடாவடித்தனம் எந்த அள்வுக்கு இருக்குமோ என சமூக வலைத்தளங்களில் கமெண்டுகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: இதுக்கு மேல லியோ தான் வந்து சொல்லணும்.. ரத்தம் தெறிக்கும் லியோ டிரெய்லர்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.