ETV Bharat / state

"வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை" - தமிழ்நாடு காவல்துறை இந்தியில் ட்வீட்!

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கவலைத் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை இதுதொடர்பாக தங்களது ட்விட்டரில் இந்தியில் விளக்கமளித்துள்ளது. வட மாநிலத் தொழிலாளர்களுக்கு புரியும் வகையில் இந்தியில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

மாநில
மாநில
author img

By

Published : Mar 3, 2023, 7:55 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக வடமாநிலத் தொழிலாளர்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை தேடி, திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

வட மாநிலத் தொழிலாளர்களின் வருகையால், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகும் சூழல் ஏற்படுவதாக அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களிலும் வட மாநிலத் தொழிலாளர்களை எதிர்மறையாக பலரும் ட்ரோல் செய்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டு மக்களிடையே வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்த தவறான எதிர்மறையான கருத்துகள் பரவி வருகின்றன.

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வட மாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. குறிப்பாக, திருப்பூரில் நடப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகின. இதுதொடர்பாக பீகார் உள்ளிட்ட மாநில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. அதைக் கண்டு அச்சமடைந்த சில வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக திருப்பூர் பின்னலாடை நிறுவன உரிமையாளர்களும் புகார்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இந்த வீடியோக்கள் பொய்யானவை என்றும், ஏற்கனவே வேறு சில இடங்களில் நடந்த சம்பவங்களை தற்போது நடந்ததுபோல தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்திருந்தார். அதேபோல், வட மாநிலத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ அல்லது பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக திருப்பூர் மாவட்ட எஸ்பி கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் போலியானவை என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருந்தார்.

இதனிடையே தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வருவது கவலை அளிப்பதாக பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று(மார்ச்.2) டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக தமிழ்நாட்டு அரசு அதிகாரிகளுடன் பேசி, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி பீகார் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு இருவரும் பீகார் அரசுக்கு விளக்கமளித்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை இந்தியில் ட்வீட்
தமிழ்நாடு காவல்துறை இந்தியில் ட்வீட்

இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை இன்று தங்களது ட்விட்டர் பக்கத்தில், வட மாநிலத்தவர்களுக்கு புரியும் வகையில் இந்தியிலும் விளக்கமளித்துள்ளது. அதில், " சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் உள்ள கொலைச் சம்பவம் கோவையில் அண்மையில் நடந்தது. இது தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்தது. இதில் கொலை செய்யப்பட்டவர்களும், கொலை செய்தவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோ பீகார் தொழிலாளர்களுடன் தொடர்புடையது அல்ல. இதுபோல தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சமூக ஊடகங்களில் வீடியோவை பகிர்பவர்கள் அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொண்ட பிறகு பகிர வேண்டும்" என்று இந்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ உண்மையில்லை" - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.