ETV Bharat / state

மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் சிறப்பு பிரிவினருக்கு கூடுதல் இடங்கள்! - நீட்

11 மருத்துவ கல்லூரிகளில் அரசு தரப்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அடுத்தாண்டு முதல் சிறப்பு பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

medical colleges
medical colleges
author img

By

Published : Jan 28, 2022, 2:57 PM IST

சென்னை : புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் அரசு தரப்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அடுத்தாண்டு முதல் சிறப்பு பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெற்று வரும் மருத்துவ கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் இன்றைய மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "முதலமைச்சர் தலைமையில் நடப்பதாக இருந்த இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக முதல்வரும், அமைச்சரும் பங்கேற்கவில்லை.

Extra seats in medical colleges for next year saya radha krishnan
மருத்துவக் கல்லூரிகளில் அடுத்தாண்டு முதல் சிறப்பு பிரிவினருக்கு கூடுதல் இடங்கள்!
இன்று புதிதாக தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு அனுமதி கிடைத்ததன் மூலம் 10 பல் மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. இதனால் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 107 பல் மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 11,12ஆம் தேதி முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடையும். கடந்த ஆண்டை விட 1,570 இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக கிடைத்துள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் அரசு தரப்பில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அடுத்தாண்டு முதல் சிறப்பு பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தவறுதலாக பொதுப்பிரிவில் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 152 பேர் மீண்டும் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : நீட் தேர்வுக்கு வயது ஒரு தடையில்லை... 61 வயதில் சாதித்த முன்னாள் ஆசிரியர்.. மு.க. ஸ்டாலினுக்கு நன்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.