ETV Bharat / state

அரசு பேருந்துகளின் ஆயுள்காலம் நீட்டிப்பு! - அரசு பேருந்துகளின் ஆயுள்காலம் நீட்டிப்பு

சென்னை: அரசு பேருந்துகளின் ஆயுள் காலத்தை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

buses
buses
author img

By

Published : Jul 10, 2021, 11:37 AM IST

இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், அரசு விரைவு பேருந்துகள் 3 ஆண்டு அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் என்று இருந்ததை இனி வரும் காலங்களில் 7ஆண்டுகள் அல்லது 12லட்சம் கிலோமீட்டர் எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற அரசு பேருந்துகள் 7 லட்சம் கிலோமீட்டர் அல்லது 6 ஆண்டுகள் என்றிருந்ததை இனி வரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சாலை வசதிகள், நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும், நவீன வடிவமைப்பு காரணமாக இம்மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு மாதத்திற்குப் பின்னர் பேருந்து சேவை தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.