ETV Bharat / state

ரவுடி சச்சினிடம் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு; வெடிக்க வைத்து அழிக்கப்பட்டது - detonated and destroyed

ரவுடி சச்சினிடம் கைப்பற்றப்பட்ட 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மூலம் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டது.

ரவுடி சச்சினிடம் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு

author img

By

Published : Oct 19, 2022, 6:01 PM IST

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவீரப்பட்டுப் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி ரவுடி சச்சின் என்பவரை போலீசார் பிடிக்கச் சென்றனர். அப்போது பிடிக்க வந்த போலீசார் மீது ரவுடி சச்சின் நாட்டு வெடிகுண்டை வீசி கொல்ல முயன்று, அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த பாஸ்கர் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

போலீசை வெட்டிய ரவுடி சச்சினை சோமங்கலம் ஆய்வாளர் சிவகுமார் துப்பாக்கியால் தொடையில் சுட்டுப்பிடித்தார். பின் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாங்கான்யம் பகுதியில் மலையடிவாரம் அருகில், மருதம் வெடிகுண்டு நிபுணர் குழு மூலம், தாம்பரம் தீயணைப்புத் துறை, ஆம்புலன்ஸ், ஊர் தலைவர், சோமங்கலம் ஆய்வாளர் சிவகுமார் முன்னிலையில் 4 அடி ஆழம் பள்ளம் தோண்டி, இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அதில் புதைத்து வெடிக்க செய்து அழித்தனர்.

ரவுடி சச்சினிடம் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு
ரவுடி சச்சினிடம் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு

இதையும் படிங்க: வாடிக்கையாளரிடம் ரூ.36 லட்சம் பணம், 50 பவுன் தங்க காசு மோசடி: வங்கி மேலாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.