ETV Bharat / state

குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு புகார் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கம் என்ன?

டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா? என டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 27, 2023, 3:08 PM IST

குரூப்-4, சர்வேயர் தேர்வில் முறைகேடு புகார்! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கம் என்ன?

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு 7,301 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 4-க்கான எழுத்துத் தேர்வு 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பித்திருந்த நிலையில், 18,36,535 தேர்வு எழுதி இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி, குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311ஆகவும் அதிகரிக்கப்பட்டன. தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24, 2023-ல் வெளியானது.

இந்த தேர்வு முடிவில், காரைக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒரே பயிலகத்தின் மாணவர்கள் ஏறத்தாழ 2000 பேர் அளவில் தேர்வில் தேர்ச்சி பெற்றது சர்ச்சையாகி உள்ளது. இந்தப் பிரச்னை இன்று (மார்ச்.27) சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், TNPSC-யில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர், 'கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வெளியான நிலஅளவையர் தேர்வு முடிவுகளில் 700 பேர் ஒரே தேர்வு மையத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், சமீபத்தில் வெளிவந்த குரூப் 4 தேர்வு முடிவுகளிலும், தென்காசி பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குரூப் 2 தேர்வில் வினாத்தாளில் வரிசை மாற்றம் ஏற்பட்டதும், மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுபோல, முறைகேடுகள் நடப்பதை அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இவரைத்தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், 'டிஎன்பிஎஸ்சியில் தமிழர் அல்லாத யார் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம் என கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மாற்றத்தால் தான் முறைகேடுகள் அதிகரித்ததாக' கூறினார். இதனால், அவையில் அதிமுகவுக்கும் வேல்முருகனுக்கும் இடையே மோதல் உருவானது.

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 'நான் யாரையும் நேரடியாக குற்றம்சாட்டாமல் அரசின் கவனத்தை ஈர்த்தேன். ஆனால் அதற்கு எதிர்வினையாக வேறு ஒருவரை வைத்து கடந்த அரசை குறை சொல்வது என்ன நியாயம்' என கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், 'டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தியை பார்த்ததும் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு அனுப்பி டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் உரிய பதில் தருமாறு அனுப்பி உள்ளேன். மேலும், குரூப் 4 தேர்வு குறித்து பொதுவெளியில் வந்த தகவலுக்கும் என்னிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த தகவலுக்கும் சம்பந்தமே இல்லை’ எனத் தெரிவித்தார்.

மேலும், தென்காசியில் மொத்தமே எட்டு மையங்கள் தான் உள்ளன என்றும், அதில் முதல் 500 பேரில் 27 பேரும் முதல் 1000 பேரில் 45 பேரும் முதல் பத்தாயிரம் பேரில் 397 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர், எத்தனை மையங்களை நடத்துகிறார்? எங்கு எங்கு நடத்துகிறார்? என்பது குறித்து உரிய தகவல் என்னிடம் இல்லை எனக் கூறிய அவர், குரூப் 4 தேர்வில் ஜூனியர் அசிஸ்டன்ட் (Junior Assistant) மற்றும் டைப்பிஸ்ட் (Typist) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் ரேங்குகளில் மாற்றம் உள்ளதாக கூறுகிறார்கள். ஜூனியர் அசிஸ்டன்ட் தேர்வுக்கு சிறப்பு தகுதிகள் எதுவும் தேவையில்லை; ஆனால், டைப்பிஸ்ட்டுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப்பிங் தெரிய வேண்டும் உள்ளிட்ட சிறப்புத் தகுதிகள் தேவை. அதனால், ரேங்குகளில் மாற்றம் ஏற்படுவது இயல்புதான் என்றும் பி.டி.ஆர் தெரிவித்தார்.

இதேபோல் தான், சர்வேயர் தேர்வுகளிலும் காரைக்குடி மையத்தில் முதல் 500 பேரில் 200 பேரும் முதல் 1000 பேரில் 377 பேரும் முதல் 2000 பேரில் 615 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். கடந்த காலங்களிலும் இதேபோல், ஒரே தேர்வு மையத்தில் இதேபோல் தேர்வு முடிவுகள் வந்துள்ளதா? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளரிடத்தில் விளக்கம் கேட்டுள்ளதாக' கூறினார்.

மேலும் பேசிய அவர், 'டிஎன்பிஎஸ்சி பொறுத்தவரைக்கும் அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் எனக் கூறியதோடு, 7000 இடத்துக்கு 24 லட்சம் பேர் தேர்வு எழுதுவது தேர்வுக்காக ரூ.45 கோடிக்கு மேல் நிதி வழங்குமாறு கேட்கப்பட்டது. மேலும், இந்த தேர்வுக்காக 100 கோடி தாளை பிரிண்ட் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

''தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஒரு தேர்வுக்காக இவ்வளவு செலவு செய்வது சரியான விதிமுறை அல்ல. தற்காலிகப் பணியாளர்களுக்கும் நிரந்தரப் பணியாளர்களுக்கும் உள்ள ஊதிய விகிதம் பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டதாக உள்ளது. தற்காலிகப் பணியாளர்களை முழுமையான பணியில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் வழங்கக்கூடிய ஊதியத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும்'' என்றும், EPF, ESI சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதன் மூலம் சமூக நீதி அடிப்படையிலும், மனித வளத்துறை மேம்படுத்துவதில் எந்த அரசுக்கும் பின்தங்கிய அரசு இல்லை என்று கூறினார்.

இதற்காகத் தான், சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டதாகவும் கூறிய அவர், அந்த அரசாணைக்கு அப்போது எல்லோருமே எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றார். இதை நடைமுறைக்கு கொண்டு வருவது அவசியமாவதாகவும், மாநிலத்தின் நலனுக்காக, அரசாங்கத்தின் எதிர்காலத்துக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்று இருப்பின், தமிழ்நாடு அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போட்டி தேர்வுக்காக படித்து வரும் பலதரப்பட்ட இளைஞர்களும், மாணவர்களும் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில், தங்களின் வாழ்க்கையின் பல நாட்களை இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காகவே செலவிட்டு இதற்காக படித்து வருகின்ற பலரும் தங்களின் வாழ்க்கையை இத்தகைய முறைகேடுகளினால் தொலைத்து விட்டதாக வேதனைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மட்டுமில்லாது அனைத்து அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளையும் சரியான வகையில், அரசுத் துறைகள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பட்டதாரி இளைஞர்கள் நலனையும் கருத்தையும் நினைவில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குரூப் 4 தேர்வில் முறைகேடா? ஆடியோ வெளியிட்ட தேர்வர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.