ETV Bharat / state

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் - நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு - exception of appearing ramadass and anbumani ramadass mhc order

வன்னிய இளைஞர் பெருவிழா பொதுக்கூட்டத்தை அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நடத்தியதாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் - நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு

author img

By

Published : Jun 26, 2021, 5:53 PM IST

சென்னை: கடந்த 2012ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னிய இளைஞர் பெருவிழா பொதுக்கூட்டத்தை அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகிய நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி எம். நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என பாமக தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, உத்தரவிட்ட நீதிபதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து, விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து நால்வருக்கும் விலக்கு அளித்தார்.

மேலும், மனு தொடர்பாக மாமல்லபுரம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர், காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்..

இதையும் படிங்க: வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.