ETV Bharat / state

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வு தேதிகள் வெளியீடு - chennai district news

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வு தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

exam-dates-for-polytechnic-college-lecturer-post

author img

By

Published : Sep 2, 2021, 9:17 PM IST

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறவுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு 2019இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தாரர்கள் 2020 ஜனவரி 22ஆம் தேதிமுதல் பதிவேற்றம் செய்திடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தைப் பதிவேற்றம்செய்ய பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதில் கணினிவழித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேதிகள் பெருந்தொற்றுச் சூழல், தேர்வு மையங்களின் தயார் நிலை, நிர்வாக வசதியைப் பொறுத்து மாறுதலுக்குள்பட்டது எனவும் அறிவிக்கப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.