ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 3, 2020, 9:07 PM IST

1. நீட், ஜே.இ.இ தேர்வு தேதி அறிவிப்பு

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2. 'எங்கள் அனுமதியின்றி ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அமைக்கக் கூடாது'.

சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்துவந்த இல்லத்தை எங்கள் அனுமதியின்றி நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

3. தூத்துக்குடியில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு- மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடியில் நாளை நள்ளிரவு முதல் திங்கள் கிழமை காலைவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

4. சசிகலா எப்போது விடுதலை ? ஆர்.டி.ஐ தகவலோடு கேள்வியெழுப்பியுள்ள கடிதம்...!

பெங்களூரு : பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா நடராஜன் எப்போது விடுதலை செய்யப்படுவாரென அவரது ஆதரவாளர்கள் பெங்களூரு மத்திய சிறை அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

5. அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 5 மண்டலங்களாக மாற்றம்!

சென்னை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஐந்து மண்டலங்களாக மாற்றியமைத்து அக்கட்சியின் தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

6. முகக்கவசம் அணியுங்கள்...! நீங்கள் கேட்டதைத் தருகிறோம் - ட்விட்டர் நிர்வாகம்

கரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக வலைதளமான ட்விட்டர் பெரும் முயற்சிகளை ஏற்படுத்திவருகிறது. அதன் ஒரு அங்கமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் ட்விட்டரில், பயனர்கள் பதிவிட்டதை திருத்தும் வசதி (edit option) சேவை வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

7. கான்பூர் என்கவுன்டர் : தேடுதல் வேட்டையில் காவல் துறையினர்

லக்னோ : உத்தரப் பிரதேச என்கவுன்டரில் எட்டு காவல் துறையினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ரவுடி துபேவின் சகோதரர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

8. 'ரீகல் டாக்கீஸ்' சர்வதேச ஓடிடி தளத்தை தொடங்கும் பிரபல தயாரிப்பாளர்

சென்னை: ரீகல் டாக்கீஸ் எனும் சர்வதேச ஓடிடி தளத்தை பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் தொடங்கியுள்ளார்.

9. கோலிக்கு பதில் பாக். ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிடுங்கள் - பாபர் அசாம்!

கோலியுடன் தன்னை ஒப்பிடுவதற்கு பதிலாக ஜாவித் மியான்தாத் போன்ற பாகிஸ்தான் ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டால் நன்றாக உணர்வேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

10. ”10 நாள்களில் 12 யானைகள் மர்ம மரணம் - தமிழ்நாடு அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?”

சென்னை : கோவை வனக்கோட்டப் பகுதியில் கடந்த 10 நாள்களில் 12 யானைகள் மர்மமான வகையில் உயிரிழந்துள்ளதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.