ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - ETV Top 10 news @ 9 Pm

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 9, 2020, 8:59 PM IST

1. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 21 பேர் உயிரிழப்பு!

சென்னை: மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் 1,685 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் 21 பேர் இன்று கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

2. லடாக்கில் படையை விலக்கிய சீனா!

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் தனது படையை விலக்கிக் கொண்டது.

3. கெஜ்ரிவாலின் கரோனா பரிசோதனை முடிவு வெளியீடு!

டெல்லி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூன் 9) வெளியானது.

4. இடஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மனு

டெல்லி: மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

5. லடாக் எல்லைப் பிரச்னை: அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் இந்திய-சீன ராணுவங்கள்

டெல்லி : இந்தியா-சீனா இடையே நிலவிவரும் லடாக் எல்லைப் பிரச்னையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வரும் சூழலில், இன்னும் சில நாள்களில் இந்திய ராணுவக் குழு ஒன்று எதிர் தரப்புடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.

6. 'இருக்கு... ஆனா இல்ல' - குழப்பும் சிந்தியாவின் கரோனா ரிப்போர்ட்!

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவச் சோதனை ஒன்றில் கரோனா இருப்பதாகவும், மற்றொரு சோதனையில் கரோனா இல்லை என்பது போலவும் முடிவுகள் வெளிவந்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

7.'தலைவன் இருக்கின்றான்' அப்டேட்: ரசிகர்களை சந்திக்கவுள்ள உலக நாயகன், ஆஸ்கர் நாயகன்!

'தலைவன் இருக்கின்றான்' படம் குறித்து கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து விரைவில் சமூக வலைதளங்களில் பேசவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

8. ரேடார் தொழில்நுட்ப உதவியோடு 2,000 ஆண்டுகள் பழமையான ரோமானிய நகரம் கண்டுபிடிப்பு!

ரோம்: இத்தாலி தலைநகர் ரோம் அருகே மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ரோமானிய நகரை, ரேடார் கருவிகளின் உதவியோடு தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

9. ஊரடங்கால் மேலும் வேலைவாய்பை இழக்கும் இளைஞர்கள்!

டெல்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கால், நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவோரின் எண்ணிக்கை 61 விழுக்காடு குறைந்துள்ளதாக வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அளிக்கும் பிரபல நிறுவனமான நாக்குரி தெரிவித்துள்ளது.

10. நடக்குமா? நடக்காதா? - டி20 உலகக்கோப்பை குறித்த இறுதிமுடிவு நாளை!

டெல்லி: டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவது குறித்த இறுதிமுடிவு ஐசிசி சார்பில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.