ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7am

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Dec 2, 2020, 6:52 AM IST

1. 'குட் பட் லேட்'- விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய அசோக் கெலாட்!

இந்தியாவில் உள்ள விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இவ்விவகாரத்தில் கவனம் செலுத்துகிறார். இது குட் (நல்லது) என்ற போதிலும் ரொம்ப லேட் (தாமதமானது) என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

2. பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை முடக்கிவைக்கக் கூடாது - அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை முடக்கிவைக்கக் கூடாது என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

3. விழியற்றோருக்கு வழிகாட்டும் சென்சார் கண்ணாடி!

விழித்திறன் குறைபாடு கொண்டோர் பயன்படுத்தும் வகையில், சிறப்பு கண்ணாடி மற்றும் காலணிகளை உருவாக்கியுள்ளனர். இந்தக் காலணி மற்றும் கண்ணாடி விழித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழி கொடுக்கிறது.

4. மருத்துவக் கலந்தாய்வு - எட்டு மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழில் சந்தேகம்!

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்ற எட்டு மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ் தொடர்பாக சந்தேகம் எழுந்ததால், அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

5. '5 நாள் காவல் முடிவடைந்த நிலையில், 7 நாள் காவல்'- அமலாக்கத் துறை பிடியில் சிவசங்கர்!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரின் 5 நாள் நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்த நிலையில், 7 நாள்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. புதிய சிப்காட் சிமா திறன் மேம்பாட்டு மையத்தை திறந்துவைத்த அமைச்சர்

காஞ்சிபுரம்: புதியதாக உருவாக்கப்பட்ட சிப்காட் சிமா திறன் மேம்பாட்டு மையத்தை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கிவைத்தார்.

7. காவல் துறையினரால் கிடைத்த வேலையை இழக்கும் பணியாளர்!

சென்னை: காவல் துறையினரின் அலட்சியத்தால் பணி இழக்கும் நிலையில் இருப்பதாக தனியார் நிறுவன பணியாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8. இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசுப் பேருந்து : கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சோகம்!

கன்னியாகுமரி: இருசக்கர வாகனத்தின் மீது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9. மாரடோனாவுக்கு மரியாதை செலுத்திய போகா ஜூனியர்ஸ்; கதறியழுத மாரடோனா மகள்!

மாரடைப்பால் உயிரிழந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனாவுக்கு மரியாதை செய்யும்விதமாக போகா ஜூனியர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் மாரடோனா பெயர் பதித்த ஜெர்சியில் விளையாடினர்.

10. கிராமிய விருதுக்குப் பரிந்துரைசெய்யப்பட்ட தமிழ்ப் பெண்ணின் ஆல்பம்!

மும்பை: பாடகி பிரியா தர்ஷினியின் முதல் ஆல்பம் சர்வதேச அங்கீகாரமான கிராமிய விருதுக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.