1.'நாட்டை நாசமாக்கும் நரேந்திர மோடி' - தாக்கும் ராகுல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நாட்டை நாசமாக்குவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2. ஒரு சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரெட்மி நோட் 9!
அமேசான் தளத்தில் இன்று விற்பனைக்குவந்த ரெட்மி நோட் 9, ஒரு சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளது.
3. சிபிஐ வசம் சென்றது இசையமைப்பாளர் பாலபாஸ்கர் வழக்கு!
மலையாள வயலின் இசைக் கலைஞரும், இசையமைப்பாளருமான பாலபாஸ்கர், 2018 செப்டம்பர் 25ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
4. கரோனாவை எதிர்கொள்ள சித்த மருத்துவத்தை நாடும் மக்கள்: நாட்டு மருந்து விற்பனையாளர்கள் மகிழ்ச்சி!
சேலம்: கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள சித்த மருந்தை மக்கள் நாடுவதால், சித்த மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக பாரம்பரிய நாட்டு மருந்து விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
5. கடன் வாங்கியதாக அவதூறு: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு புகார்
சென்னை: தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி கடன் வாங்கியதாக சமூக வலைதளங்களில் ஆவணங்கள் வெளியிட்டு அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்களிடம் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு புகார் அளித்துள்ளார்.
6.பொருளாதாரத் தோல்வியை எப்போது ஒப்புக்கொள்வீர்கள் பிரதமரே?: ப.சிதம்பரம் கேள்வி!
நாட்டில் மூழ்கி வரும் தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்துத் துறைகளைச் சரி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
7. 'இது மட்டும் நடந்தால், ஆட்சி கண்டிப்பா காலி' - ராஜஸ்தான் சபாநாயகர் வைரல் வீடியோ
ஜெய்ப்பூர்: 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகினால், நிச்சயம் ஆட்சி கலைந்துவிடும் என்று ராஜஸ்தான் சபாநாயகர் ஜோஷி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
8. நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: பருவமழையால் பாழ்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாத்து கொள்முதல் செய்ய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
9. தேனியில் அசுர வேகத்தில் பரவும் கரோனா: அரசின் அலட்சியமா? பொதுமக்களின் கவனக்குறைவா?
மருத்துவர்களின் அறிவுரை இன்றி மருந்தகங்களில் தனியாக மருந்துகள் வாங்கி உட்கொள்வது போன்ற காரணங்களால்தான் கரோனா பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. இப்படி, 70% நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சவால்கள் ஏற்படுகின்றன. இதனாலும், உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறார், அரசு மருத்துவமனை முதல்வர் அசோக்.
10. இந்திய - சீன மோதல்: எல்லை பிரச்னைக்கு அப்பாற்பட்டது
இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் 82 விழுக்காட்டிற்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்யும் அதே வேளையில், 2022ஆம் ஆண்டில் உள்ளூர் ஆய்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்நாட்டு எத்தனால் எரிபொருளின் பயன்பாடு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் அதை 67 விழுக்காடாகக் குறைக்கும் முயற்சி நடந்து வருகிறது. மறுபுறம், சீனா அதன் மொத்த எண்ணெய் தேவையில் 77 விழுக்காட்டை இறக்குமதி செய்கிறது.