தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபா, தீபக் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பணிபுரிபவருக்கு கரோனா: 2 தரை தளத்திற்குச் சீல்வைப்பு!
டெல்லி: நாடாளுமன்றத்தில் பணிபுரியும் அலுவலருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு தரை தளத்திற்குச் சீல்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் - சத்தீஸ்கர் அரசு
ராய்ப்பூர்: பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக ஒலி எழுப்பும் இசைக்கருவிகளை (DJ) பயன்படுத்த சத்தீஸ்கர் அரசு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
'நிச்சயம் இது உங்களை இருக்கையின் நுனிக்கு கொண்டுவரும் படமாக இருக்கும்'
ஜோதிகா நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் குறித்த கதைக்கரு ஆங்காங்கே பகிரப்பட்டுவருகிறது. இந்நிலையில் OTTயில் வெளியாகியிருக்கும் கதை குறித்து நடிகர் சூர்யா, ஜோதிகா தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
ஆம்பன் புயலுக்கு உதவ முன்வந்த கால்பந்து வீரர்கள்...!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் 38 கால்பந்து வீரர்கள் இணைந்து உதவுவதற்கு முன்வந்துள்ளனர்.
ட்ரம்பின் மத்தியஸ்தம் தேவையில்லை - நிராகரித்த சீனா
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மத்தியஸ்தம் தேவையில்லை என சீனா நிராகரித்துள்ளது. முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையேயான பூசலுக்கு மத்தியஸ்தம் செய்வதாக அதிபர் ட்ரம்ப் தாமாக முன்வந்து ட்விட்டரில் பதிவிட்டார்.
'காட்மேன்' குழுவினரை கைது செய்ய வேண்டும் - நாராயணன் திருப்பதி
சென்னை: 'காட்மேன்' சீரிஸை தடை செய்ய வேண்டும் என்றும் அதில் நடித்துள்ள ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
விரைவில் ஆளில்லா விமானத்தில் அத்தியாவசிய பொருள்கள்!
டெல்லி: ஆளில்லாத விமானம் மூலம் அத்தியாவசிய பொருள்களை டெலிவரி செய்ய சோதனை முறையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதியளித்துள்ளது.
270 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் புக் மை ஷோ
ஓலா, உபெர், சொமாடோ, சுவிகி போன்ற பிரபல டெக் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் தங்களின் ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன. இத்தருணத்தில் இணையதள பொழுதுபோக்கு காட்சிகளை பதிவுசெய்யும் நிறுவனமான புக் மை ஷோ தங்களிடம் உள்ள ஊழியர்களில் 270 பேரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.