+2 வேதியியல் தேர்வில் தவறான கேள்வி... கூடுதல் மதிப்பெண்
சென்னை:12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற வேதியியல் தேர்வில் கேட்கப்பட்டிருந்த தவறான கேள்விக்கு கூடுதலாக மூன்று மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவர் சைமன் வழக்கு: 8 பேருக்கு நிபந்தனையுடன் பிணை
கரோனா பாதித்து உயிரிழந்த மருத்துவர் சைமன் வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டு பேருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாலின் அரசியல் நாடகம் ஆடுகிறார்- அமைச்சர் காமராஜ்
சென்னை: எந்த ஆதாரமும் இன்றி மக்களுக்காக செயல்பட்டுவரும் அரசு மீது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி அரசியல் நாடகம் ஆடுகிறார் என உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.
மது பாட்டில்களின் புகைப்படத்தை பதிவேற்றிய மத்திய உள்துறை அமைச்சகம்!
டெல்லி: உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், மேற்கு வங்க ஆம்பன் புயல் மறுசீரமைப்பு பணிகளின் புகைப்படங்களுடன் மது பாட்டில்களின் புகைப்படமும் பதிவேற்றப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கேலிக்கூத்தாகியுள்ளது.
பத்திரத் திட்டத்தை நிறுத்திய ரிசர்வ் வங்கி - ப. சிதம்பரம் காட்டம்
டெல்லி: ரிசர்வ் வங்கி பாண்ட் திட்டம் எனப்படும் பத்திரத்திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் நடைபெறும் - லக்ஷ்மண், கும்ப்ளே நம்பிக்கை!
ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் இந்தாண்டில் நடைபெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விவிஎஸ் லக்ஷ்மண், அனில் கும்ப்ளே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
'ஏழாம் அறிவு' தொடர்ந்து 'காப்பான்'- சூர்யாவிடம் உதவி கேட்கும் 90ஸ் கிட்ஸ்
நடிகர் சூர்யாவின் திரைப்படங்களில் அமைந்த காட்சிகள் நிஜ வாழ்க்கையில் தற்போது நடந்து வரவே, அதனை கலாய்த்தும் 90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமாவது போன்ற படத்தில் சூர்யா நடிக்கவும் மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் கேலியாக வலியுறுத்தி வருகின்றனர்.
வர்க்க வேறுபாட்டை ஆதரிக்கும் விளம்பர விவகாரம்: ஹேம மாலினி விளக்கம்
வர்க்க வேறுபாட்டையும், பெண் அடிமைத்தனத்தையும் தூக்கிப் பிடிப்பதாக கெண்ட் நிறுவனத்தின் சமீபத்தின் விளம்பரம் கடும் விமர்சங்களைப் பெற்றுவந்த நிலையில், விளம்பரத்தில் நடித்த ஹேம மாலினி தற்போது ட்விட்டரில் விளக்கம் அளித்து பதிவிட்டுள்ளார்.
பாங்காக் ஷாப்பிங் மால்... கரோனா பரவலை தடுக்க ரோபோக்கள் நியமனம்!
பாங்காக்: கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தாய்லாந்து ஷாப்பிங் மாலில் நான்கு விதமான ரோபோக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இயற்கை இரக்கமற்றது: தி பேர்ட்ஸ், லோக்கஸ்ட் அட்டாக், கார்ப்பரேட் எதிர்ப்பு..!
கரோனா வைரஸ் தாக்குதல், ஆம்பன் புயல், பாலைவன வெட்டுக்கிளிகள் (Locust) தாக்குதல் என இந்தியாவுக்கு அடி மேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. 2020 மனிதகுலத்தின் இறுதி ஆண்டு என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதுபற்றிய விரிவான தொகுப்பு...