ETV Bharat / state

இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm
author img

By

Published : Jan 19, 2021, 9:20 PM IST

தமிழ்நாட்டில் இன்று மேலும் 543 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் இன்று (ஜன.19) மேலும் 543 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை-சேலம் இரவு நேர விமானம்! - பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்!

சென்னை: சென்னையிலிருந்து சேலத்திற்கு மாலை அல்லது இரவு நேர விமானம், காவிரி - குண்டாறு நதிகள் இணைப்பு உள்ளிட்ட 12 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

ஆஸி.,க்கு எதிராக மெர்சல் காட்டிய தமிழக வீரர்கள்... முதலமைச்சர் பாராட்டு - நன்றி தெரிவித்த அஸ்வின்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டியில் தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பு பெரும் மகிழ்ச்சியை தருகிறது என முதலமைச்சர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

அமைச்சர் காமராஜ் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் காமராஜ் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.

ஜெயலலிதா நினைவிடம் 27ஆம் தேதி திறப்பு

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மெரினா கடற்கரையில் இருக்கும் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைந்திருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சசிகலாவிற்கு செக் வைக்கிறாரா இபிஎஸ்?

சென்னை: சசிகலா விடுதலை ஆகவுள்ள அதே நாளில், ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட இருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பிப்ரவரி 9ஆம் தேதி முதல் செவிலியர்கள் தொடர் தர்ணா போராட்டம்

சென்னை: தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் டெல்லி பயணம்! பின்னணி என்ன?

சென்னை: அடுத்த வாரம் 27 ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகும் நிலையில், முதலமைச்சர் டெல்லியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழுநோயாளிகளின் பாதுகாவலர்களாக வாழும் கர்நாடக தம்பதி!

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டாலே நோய் ஒட்டிக் கொள்ளும் என பலரும் அஞ்சுகின்ற சூழலில், அப்படியில்லை என தங்கள் சேவையால் நிரூபித்திருக்கிறார்கள் கல்புர்கியைச் சேர்ந்த தம்பதியினர். இவர்களது ஒவ்வொரு நாளும், தொழுநோயாளிகளைச் சுத்தப்படுத்தி மருந்திடுவதில்தான் தொடங்குகிறது.

பேரணி போறது ஒரு குத்தமா? பாஜக தொண்டர்கள் மீது குண்டு வீச்சு

மேற்கு வங்கத்திலுள்ள பூர்பா மெடினிபூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியின் தலைமையில் பாஜக பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சென்ற பாஜக தொண்டர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் கையெறி குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்தத் தாக்குதல் திரிணாமுல் காங்கிரஸால் ஏவப்பட்டது என பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், திரிமுணால் காங்கிரஸ் கட்சியினர் அதை மறுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.