ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM
author img

By

Published : Apr 28, 2021, 5:01 PM IST

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், ஆனாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தொடர்ந்து கற்பிக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

'ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை மாவட்ட அளவிலும் தொடங்க வேண்டும்'

சென்னை: ரெம்டெசிவிர் ஊசி மருந்து விற்பனையை மாவட்ட அளவிலும் தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆம்பூர் அருகே இளைஞரை கொன்ற போதை சிறார்கள்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மலை கிராமத்தில் போதை சிறார்கள் குடிபோதையில் இளைஞரை வழிமறித்து குத்திக் கொலை செய்தனர்.

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை: பால் வியாபாரி போக்சோவில் கைது!

நாகப்பட்டினம்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பால் வியாபாரியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

செவிலியர் பற்றாக்குறை: கோவை அரசு மருத்துவமனை செவிலியர் ஆர்ப்பாட்டம்!

கோயம்புத்தூர்: செவிலியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை செவிலியர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!

சென்னை: 17வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

'இந்தியன் 2' படப்பிரச்சினையை தீர்க்க முடியவில்லை: இயக்குநர் ஷங்கர் தரப்பு பதில்

சென்னை: 'இந்தியன் 2' பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர், லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சு வார்த்தை தோல்வியடைந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

'உலகம் இந்தியாவிற்கு உதவ வேண்டிய நேரமிது'

'உலகம் இந்தியாவுக்கு உதவ வேண்டிய நேரமிது' என ஐ.நாவின் 75ஆவது கூட்டத்தொடர் தலைவர் வோல்கன் போஸ்கிர் தெரிவித்துள்ளார்.

2 லட்சத்தைக் கடந்த கரோனா உயிரிழப்புகள்

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா பாதிப்பால் 10 பேர் உயிரிழப்பு!

புதுச்சேரி: ஒருநாளில் உச்சபட்சமாக, 1,258 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதும், 10 பேர் உயிரிழந்துள்ளதும், மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.