ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM

author img

By

Published : Sep 22, 2021, 3:26 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

1. 3000 கிலோ ஹெராயின் விவகாரம்: விசாரணையைத் தொடங்கிய காவல் துறை

குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

2. 5 சவரனுக்கு மேல் பெற்ற நகைக்கடன்களை வசூலிக்க உத்தரவு

ஐந்து சவரனுக்கு மேல் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற நகைக் கடன்களை வசூலிக்க அனைத்துக் கூட்டுறவு மண்டல மேலாளர் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

3. ஈமு கோழி மோசடி வழக்கு - குற்றவாளிக்கு ரூ. 2 கோடி அபராதம்; 10 ஆண்டுகள் சிறை

ஈமு கோழி மோசடியில் ஈடுபட்டவருக்கு ரூபாய் 2 கோடி அபராதம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4. சென்னை சாலையில் தேங்கிய மழை நீர் - வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் நேற்று பெய்த கனமழையால் சிட்லப்பாக்கம் பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் வரை ஏரிபோல் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதியடைந்துவருகின்றனர்.

5. செல்ஃபி மோகத்தால் நால்வருக்கு நேர்ந்த துயரம்

இமாச்சலப் பிரதேசத்தில் செல்ஃபி மோகத்தால் நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6. வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாள் இன்று: வேலூரில் குவிந்த வேட்பாளர்கள்

வேலூர் மாவட்டத்தில் இன்று (செப். 22) ஊராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அதிக அளவு வேட்பாளர்கள் குவிந்தனர்.

7. ‘திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும்’

திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு உறுதியளித்துள்ளார்.

8. வைரல் காணொலி - ரஸ்க்குகளை காலால் தேய்க்கும் தொழிலாளி

ரஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர் ஒருவர் ரஸ்க்குகளை நாக்கால் நக்கி, காலால் தேய்க்கும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

9. 3 நடிகர்களுக்குத் தங்கையான கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

10. உதயநிதியை நேரில் சந்தித்த வைகைப்புயல்

நடிகர் வடிவேலு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேற்று (செப். 21) நேரில் சென்று சந்தித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.