1. விவாதம் இன்றி நிறைவேறியது சிறுவர் நீதி சட்டத்திருத்த மசோதா 2021
எதிர்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில், சிறுவர் நீதி (குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு) சட்டத்திருத்த மசோதா 2021 விவாதமின்றி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.நாட்டில் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த மசோதா முக்கிய நோக்கம் என பெண்கள் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி தெரிவித்தார்.
2. சோனியா - மம்தா சந்திப்பு: பின்னணி என்ன?
பாஜகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம். தனி நபராக எனக்கு எந்த பலமுமில்லை; அனைவரும் சேர்ந்தே பணியாற்ற வேண்டும். நான் தலைவர் அல்ல தொண்டர்; நான் மக்களோடு மக்களாக இருப்பவள் என மம்தா தெரிவித்தார்.
3. நாடாளுமன்றத்தில் அமளி: ஜோதிமணி உள்ளிட்ட 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்ய முடிவு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் காகிதங்களை வீசி மரியாதை குறைவாக நடந்துகொண்ட காரணத்துக்காக 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. காவிரி மேலாண்மை வாரிய போராட்ட வழக்கு: முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட எழுவர் விடுவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கிலிருந்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏழு தலைவர்களை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. விவசாயிகளை கண்டுகொள்ளாததால் சந்திக்கப் போகும் பேராபத்து; தீர்வு என்ன?
விவசாயம் அல்லாத பல பொருள்களின் விலைகள் பெருமளவு உயர்ந்து வரும் நிலையில், தவிர்க்கமுடியாத ஒன்றான விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. ஏற்கனவே பல பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் விவசாயிகளின் மனதை இது மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது.
6. 'இந்தி தெரியாது... தெரிந்த மொழியில் பதில் அளியுங்கள்’ - ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியில் வழங்கப்பட்ட பதிலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, தனக்கும் இந்தி தெரியாது என நீதிபதி தெரிவித்தார்.
7. ஆபாச பட விவகாரம்: ராஜ் குந்த்ராவிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
ஆபாசப் பட விவகாரத்தில் கைதான தொழிலதிபர் ராஜ் குந்த்ராவின் ஜாமீன் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
8. இளையராஜா பட இசை உரிமையைப் பெற்ற லஹரி மியூசிக்!
ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'கிளாப்' படத்தின் இசை வெளியீட்டு உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
9. IND vs SL: நான்கு இந்திய வீரர்கள் அறிமுகம்; இலங்கை பந்துவீச்சு
படிக்கல், ரூதுராஜ் கெய்க்வாட், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா ஆகிய நான்கு இந்திய வீரர்கள் இன்றைய இரண்டாவது டி20 போட்டியில் அறிமுகமாகியுள்ளனர். போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
10. TNPL 2021: டாஸ் வென்ற மதுரை; கோவை பேட்டிங்
டிஎன்பில் தொடரில் மதுரை, கோவை அணிகளுக்கு இடையிலான 13ஆவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.