ETV Bharat / state

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7am

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

7am
7am
author img

By

Published : Aug 2, 2021, 6:55 AM IST

1. ‘சமூகநீதி என்பதற்கான இலக்கணம் பிரதமர் மோடியின் அரசுதான்’

பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்ததன் மூலம் சமூகநீதி என்பதற்கு பிரதமர் மோடியின் அரசுதான் இலக்கணம் என்பது தெரியவருகிறது எனச் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கே. சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

2. இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 2

நேயர்களே... மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

3. அண்ணாமலையின் அறிவிப்பு வெற்று நாடகம் - பேரா.ஜவாஹிருல்லா

மேகதாதுவில் அணை கட்டினால் உண்ணாவிரதம் இருப்பேன் என்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பு வெற்று நாடகம் என ம.ம.க தலைவர் பேரா.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

4. பவானிசாகர் அணை நீர் திறப்பு 900 கன அடியாக குறைப்பு

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு 3,100 கன அடியிலிருந்து 900 கன அடியாக குறைக்கப்பட்டது.

5. கோவை வந்த கமலுக்கு உற்சாக வரவேற்பு

கோயம்புத்தூரில் இரு தினங்களுக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நேற்று(ஆகஸ்ட் 1) கோயம்புத்தூர் வந்தடைந்தார்.

6.புதுச்சேரியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த சூடானைச் சேர்ந்த இளைஞர் மாயம்

கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இளைஞர் மூழ்கி காணாமல்போனதையடுத்து கடலோர காவல் படை, தவளகுப்பம் காவல் துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

7. அடர் பிங்க நிறத்தில் அர்ஜென்டினா ஏரி - ரசாயன கழிவு காரணமா?

படாகோனியா பகுதியிலுள்ள ஏரி, அடர் பிங்க் நிறத்தில் மாறியதற்கு ஏரியில் கலக்கப்படும் சோடியம் சல்ஃபைட் தான் காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

8. 18 மாகாணங்களில் டெல்டா வகை கரோனா... கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

சீனாவில் 18 மாகாணங்களில் டெல்டா வகை கரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

9.சிந்து பெற்ற வெண்கலத்தால் ஒரு இடம் முன்னேறிய இந்தியா; சீனா முதலிடம்

பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றதை அடுத்து, இந்தியா ஒரு இடம் முன்னேறி 59ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

10. லாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பா... ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!

கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 3ஆம் தேதி வெளியாகிறது எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.