ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM - etvbharat tamilnews

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

5 மணி செய்தி
5 மணி செய்தி
author img

By

Published : Apr 8, 2021, 5:16 PM IST

1.திருவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குத் தடை - தமிழ்நாடு அரசு

கரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் ஏப்ரல் 10ஆம் தேதிமுதல் தடைவிதிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2. கரோனா தடுப்பூசி செலுத்திய காவல் ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இன்று இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொண்டார்.

3.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் - தேர்தல் ஆணையம் எதிர்கொண்ட பிரச்னைகள்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சின்னம் ஒதுக்கியது தொடங்கி, வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்றது வரை, தேர்தல் ஆணையம் எதிர்கொண்ட பிரச்னைகளை விளக்குகிறது இந்தத் தொகுப்பு...

4.’இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல’ - துரைமுருகன் அறிக்கை

சென்னை: தேர்தல் முடிவடைந்து புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

5.பரவி வரும் கரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு

சென்னை: பரவி வரும் கரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகளை, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

6.மதுபானங்கள் மீதான கரோனா வரி நீக்கம்: மதுபிரியர்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி: மதுபானங்கள் மீதான கரோனா வரி நீக்கியதையடுத்து மதுப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

7.அரியர் மாணவர்களுக்கும் பட்டம் வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகம்!

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, அரியர் மாணவர்களுக்கும் சென்னைப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கி இருக்கிறது.

8.பணியிடங்களில் நேரடியாக இனி கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் - கர்நாடக அமைச்சர்

பெங்களூரு: கர்நாடகாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பணியிடங்களிலேயே நேரடியாகத் தடுப்பூசி செலுத்திட முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்துள்ளார்.

9.பெயர் மாற்றமா இல்லை உருமாற்றமா? பஞ்சாப் கிங்ஸ் ஒரு அலசல்

பஞ்சாப் அணியின் கேப்டனும், கடந்த ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் கேப் வீரருமான கே.எல்.ராகுல் தாமதாக அணியை முன்னேற்றியிருந்தாலும், தரமான அணியாக அதனை மாற்றியிருந்தார்.

10.’சொன்னது சொன்னபடி 'கர்ணன்' திரைப்படம் வெளியாகும்’ - கலைப்புலி தாணு

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் திட்டமிட்டப்படி நாளை வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் 'கலைப்புலி' தாணு தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.