ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்...

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 16, 2021, 5:25 PM IST

1. Malaysian PM resigns: பதவியை ராஜினாமா செய்த மலேசியப் பிரதமர்

பெரும்பான்மையை மக்களவையில் நிரூபிக்க முடியாததை ஒப்புக்கொண்டு மலேசியப் பிரதமர் முகைதின் யாசின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2. ரேஷன் வாங்க நேரில் வரமுடியாதவர்களுக்கு மாற்றுவழி: அமைச்சர் அதிரடி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 13, 14ஆம் தேதியில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், திமுக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்குப் பதிலளித்தார்.

3. அர்ச்சகர் திட்டத்துக்கு எதிராக 2 வழக்குகள் - வழக்குகளை இணைத்து விசாரிக்க உத்தரவு

ஆகம விதிகளை பின்பற்றியே அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் கோயில்களில் அர்ச்சகராக நியமனம் செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

4. பெருநிறுவனங்களிடம் நரேந்திர மோடி அரசாங்கம் சரண்- மார்க்சிஸ்ட்

பெருநிறுவனங்களிடம் நரேந்திர மோடி அரசாங்கம் சரணடைந்துவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டியுள்ளது.

5. தமிழ்நாட்டில் இன்று முதல் தொடங்கியது ஆசிர்வாத யாத்திரை..!

தமிழ்நாடு பாஜக சார்பில் மக்கள் ஆசிர்வாத யாத்திரையை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைத்தார்.

6. முதலமைச்சரிடம் சத்துணவு ஊழியர்கள் வைத்த வேண்டுகோள்

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கத்தினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7. ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை காக்க நரேந்திர மோடி அரசாங்கம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

8. அவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் அறிவிப்பு

சபாநாயகர் இல்லாத நேரத்தில் அவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

9. ஆப்கான் விமான போக்குவரத்து ரத்து

ஆப்கானில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து, தலைநகர் காபூல் விமான நிலையம் முடக்கப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

10. 'மக்கள் மனசுல நின்னுட்டாரு' - ஸ்டாலினின் 100 நாள் ஆட்சிப் பாடல்

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நூறு நாள்களை நிறைவுசெய்துள்ள நிலையில், அது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 'வந்துட்டாரு வந்துட்டாரு சொல்லி அடிச்சு செஞ்சிட்டாரு... வந்துட்டாரு வந்துட்டாரு மக்கள் மனசுல நின்னுட்டாரு' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.