ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - 1 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

1PM
1PM
author img

By

Published : Dec 13, 2020, 1:05 PM IST

1.உத்திரமேரூரில் கிடைத்த தங்கக் குவியல்: அரசுக்கு கொடுக்க கிராம மக்கள் மறுப்பு!

காஞ்சிபுரம்: 500 ஆண்டுகால பழமையான உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளும்பொழுது கிடைக்கப்பெற்ற தங்கத்தினை அரசுக்குத் தர முடியாது என கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

2.மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயராகும் ஏஐஎம்ஐஎம் கட்சி!

ஹைதராபாத்: வரவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தனது கட்சி நிர்வாகிகளை, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று (டிச. 12) சந்தித்துப் பேசினார்.

3. 2001 நாடாளுமன்றத் தாக்குதல்: குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர் அஞ்சலி

டெல்லி: 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களை நினைவுகூரும்விதமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

4.காஞ்சிபுரத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வில் 13,339 பேர் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 10 மையங்களில் நடைபெற்றுவரும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வை 13 ஆயிரத்து 339 பேர் எழுதுகின்றனர்.

5.வாக்காளர் சிறப்பு முகாமில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மனு!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (டிச. 12) நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள நான்கு லட்சத்து 43 ஆயிரத்து 960 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

6.நாட்டில் 98 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

டெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்தைத் தாண்டியது.

7.அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிகளின் முதல் டோஸ் நாளை(டிச.14) முதல் மக்களுக்குப் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.'கர்ணன்' தலைப்பு தனுஷ் படத்திற்கு ஏற்றதல்லை - சிவாஜி சமூக நலப்பேரவை

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத் தலைப்புக்கு சிவாஜி சமூக நலப்பேரவையினர் எதிர்ப்பு கடிதம் அனுப்பி உள்ளனர்.

9.சித்ராவின் முதல் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, ரசிகர்கள் வேதனை

அண்மையில் தற்கொலையால் உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ரா கதாநாயகியாக நடித்த 'கால்ஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (டிச.13) வெளியானது. ஆனால், அதனைkd கொண்டாட அவர் உயிருடன் இல்லை என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

10. மீண்டும் ஒளிபரப்பான ரஜினியின் கிளாசிக் படங்கள் - அசத்தும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கிளாசிக் ஹிட் படங்கள் திரையரங்கத்தில் ஒளிபரப்பப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.