ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @4PM - 4 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @4PM
Top 10 news @4PM
author img

By

Published : Jun 2, 2020, 3:55 PM IST

கரோனா: முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், மாநகராட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நளினி, முருகன் தாக்கல்செய்த வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!

சென்னை: உறவினர்களிடம் வாட்ஸ்அப் மூலம் பேச அனுமதி கேட்டு ராஜிவ் காந்தி கொலை குற்றவாளி நளினி, முருகன் தாக்கல்செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் அரசை கண்டித்துள்ளது.

உடும்பு மை வாங்கலையோ!' - காணொலி பதிவிட்ட ஜோதிட வித்தகர் கைது

திருச்சி: உடும்பில் மை தயாரித்து யூடியூப்பில் காணொலி பதிவிட்ட ஜோதிட வித்தகர் பெரியசாமி வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஜோதிடத்தில் தேர்ந்ததாக தன்னை காட்டிக் கொண்ட இவரால், தான் கைதாவதை கணிக்க முடியாமல் போனதே என்று பொதுமக்கள் எள்ளி நகையாடினர்.

பொறியியல் கலந்தாய்வு: ஆன்லைன் பதிவு விரைவில் தொடங்கும்!

சென்னை: பொறியியல் படிப்புக்கான சேர்க்கையை ஆன்லைனில் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் முக்கிய நக்சல் சுட்டுக் கொலை

ராய்ப்பூர்: பாதுகாப்பு படையினர், நக்சல்கள் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற மோதலில் முக்கிய நக்சல் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: கோவிட்-19 ஊரடங்கால் கேரள பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் வகுப்புகளை மேற்கொள்ள அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

யாசகம் பெறுபவரிடம் 77 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுகள்!

அமராவதி: மசூதி வெளியே யாசகம் பெறுபவரிடம் (பிச்சைக்காரர்) 77 ஆயிரம் செல்லாத நோட்டுகள் உட்பட இரண்டு லட்சம் ரூபாய் பணம் இருந்ததால் குழப்பம் நிலவியது.

இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: தீக்கிரையான காவலர் வாகனங்கள்

லக்னோ: புஜவுனி கிராமத்தில் இளைஞர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் வெடித்ததில், காவல் துறையினரின் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

'ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நீதி' - மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய லிவர்பூல் அணியினர்

லண்டன்: அமெரிக்காவில் உயிரிழந்த கறுப்பின அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் மறைவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் லிவர்பூல் அணியின் வீரர்கள் மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.