ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - தமிழ்நாடு செய்தி

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்தி
9 மணி செய்தி
author img

By

Published : Oct 26, 2020, 8:45 AM IST

1.ஓபிசி மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஓதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் மேல்முறையிட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

2. கரோனா பரவல்: நள்ளிரவு ஊரடங்கை அமல்படுத்திய ஸ்பெயின்

மாட்ரிட்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு ஊரடங்கை ஸ்பெயின் அமல்படுத்தியுள்ளது.

3. 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும் - தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்க ஆளுநர் எடுத்துக் கொண்ட கால அவகாசம் போதுமானது என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

4. பாஜகவின் பிகார் தேர்தல் வாக்குறுதியை விமர்சித்த உத்தவ் தாக்ரே!

மும்பை: பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்த பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசம் அல்லது கஜகஸ்தானைச் சேர்ந்தவர்களாக அந்தக் கட்சி கருதுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

5. நேருவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் பாஜக!

டெல்லி: காஷ்மீர் காலதாமதமாக இந்தியாவில் இணைக்கப்பட்டதற்கு காரணம் முன்னாள் பிரதமர் நேரு தான் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

6. கனடா தேர்தல்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒன்பது பேர் வெற்றி!

ஒட்டாவா: கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒன்பது பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

7. காய்ச்சலுக்காக சென்றவருக்கு தவறான சிகிச்சை; மருத்துவரால் கண் பார்வை இழந்த பெண்!

கன்னியாகுமரி: கோவில்விளை பகுதியில் நோயாளிக்கு தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

8.பார்முலா ஒன்: அதிக போட்டிகளில் வெற்றி பெற்று புதிய சாதனைப் படைத்த ஹேமில்டன்

லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அதிக போட்டிகளில் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை லிவீஸ் ஹேமில்டன் படைத்துள்ளார்.

9.ஸ்டோக்ஸின் அதிரடி சதத்தால் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

ராஜஸ்தான் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

10.'தரமான சம்பவம்' - சூர்யாவின் 40ஆவது படத்தை இயக்குவது யார் தெரியுமா?

நடிகர் சூர்யாவின் 40ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.