ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top-10-at-9-pm
etv-bharat-top-10-at-9-pm
author img

By

Published : Jul 6, 2020, 8:54 PM IST

உலகிற்கே சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது - ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு மட்டுமில்லாமல் உலகிற்கே சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடு அதிகரிப்பு!

டெல்லி: அசாம்,கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் திட்டம்... விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் கொடுந்துயரம்: ஸ்டாலின்

சென்னை: பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம் - சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மதுரை: பெரும்பாலான பொதுமக்கள் முகக்கவசம் அணிவதிலும், தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதிலும் அலட்சியம் காட்டுகின்றனர் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் அலட்சியத்தால் கருத்தடை செய்துகொண்ட 2 பெண்கள் உயிரிழப்பு!

ஜெய்பூர்: மருத்துவர்களின் அலட்சியத்தால் கருத்தடை முகாமில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஊரே அடங்கி நிக்கும், எங்க கருப்பன் நடந்து போனா' - சூரி!

நடிகர் சூரி தனது கருப்பன் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முதல் டெஸ்டில் பிராட் பங்கேற்க மாட்டார்?

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜூம் செயலிக்கு சிறந்த மாற்றாக இருக்குமா ஜியோ மீட்?

டெல்லி: சீனாவைச் சேர்ந்த ஜூம் செயலிக்கு மாற்றாக ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள ஜியோ மீட் செயலி இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிற்கு 7 கோடியை அள்ளும் ராக்!

வாஷிங்டன்: இன்ஸ்டாகிராமில் 189 மில்லியன் மக்கள் பின்தொடரும் டுவைன் ஜான்சன், ஒரு விளம்பரதாரர் பதவிக்கு ரூ. 7 கோடி வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'வங்கிகளின் வாராக்கடன் சிக்கல்' குறித்து புத்தகம் எழுதும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்!

மும்பை: இந்தியா வங்கிகளில் நிலவும் வாராக்கடன் சிக்கல் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் பட்டேல் புத்தகம் எழுதுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.