குட்கா விவகாரம்:
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
![குட்கா விவகாரம்:](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8816735_che_1.jpg)
போலி சித்த மருத்துவர் வழக்கு:
போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
![சித்த மருத்துவர் வழக்கு:](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8816735_che_2.jpg)
தேசிய கொடியை அவமதிப்பில் எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கு:
தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் முன்பிணை கோரி எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
![தேசிய கொடியை அவமதிப்பில் எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கு:](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8816735_che_3.jpg)
மூன்றாம் நாளாக கூடும் சட்டப்பேரவை:
மூன்றாம் நாளாக நடைபெறும் இன்றைய சட்டப்பேரவையில் துணைநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படயிருக்கிறது. மேலும் சட்டமுன் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றுதல் பணி நடைபெறயிருக்கிறது.
![தமிழக சட்ட பேரவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8816735_che.jpg)