ETV Bharat / state

ஆகஸ்ட் - 13 முக்கிய தகவல்கள் #EtvBharatNewsToday - admk mla meet

இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பைக் காணலாம்.

news today
இன்றைய செய்திகள்
author img

By

Published : Aug 13, 2021, 6:38 AM IST

Updated : Aug 13, 2021, 9:15 AM IST

இன்று பட்ஜெட் தாக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதன்முதலாக காகிதமில்லா 'இ-பட்ஜெட்' இன்று (ஆக.,13) தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார். திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

news today
இன்று பட்ஜெட் தாக்கல்

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.

news today
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது.

news today
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ஏப்ரலில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

etv bharat
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

news today
கனமழை எச்சரிக்கை

டிஎன்பிஎல் குவாலிபையர் 2 ஆட்டம்: சென்னை - திண்டுக்கல் மோதல்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நாளை நடக்கவுள்ள குவிலிபையர் 2 ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

news today
சென்னை - திண்டுக்கல் மோதல்

Last Updated : Aug 13, 2021, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.