ETV Bharat / state

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் 500-600 ஏக்கர் சாகுபடி பரப்பு பகுதிகளில் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேரடி நெல்
நேரடி நெல்
author img

By

Published : Mar 15, 2022, 7:07 AM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த வெங்கடேசன் உள்ளிட்ட விவசாயிகள் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிலங்களில் சாகுபடியாகும் நெல்லை, அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பதாகவும், ஆனால் ஊழல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் விவசாயிகள் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் போதுமான அளவில் கொள்முதல் நிலையங்கள் இல்லை என்றும், 3,000 ஏக்கர் பரப்பளவிற்கு ஒரு கொள்முதல் நிலையம் என்ற அளவில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதகாவும், ஒரு மாதம் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதாலும், அதற்கு பின்னர் தனியாரிடம் விற்பதாலும் விவசாயிகள் இழப்பை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பு வைப்பதற்கான போதுமான கிட்டங்கிகளும் இல்லை, கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவுசெய்து விற்பனை செய்வதால் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், இடைத்தரகர் ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் வரை கமிஷன் வாங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் 27 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என அரசு அறிவித்தாலும், அவை முறையாக செயல்படவில்லை எனவும், அவற்றில் 26 நிலையங்கள் பள்ளி கட்டிடம், கூட்டுறவு வங்கி, நூலக கட்டிடம் ஆகியவற்றில் செயல்பட்டு வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் போதுமான கொள்முதல் நிலையங்களை அமைக்கவும், தானியங்கி டோக்கன் நடைமுறைகளை பின்பற்றவும் உத்தரவிட்டிருந்தாலும், இதுவரை அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அதனால் 500 முதல் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில், போதுமான போக்குவரத்து வசதி, இருப்பு வைக்கும் வசதி, அடிப்படை வசதிகளுடன் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் மையத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், இடைத்தரகர்களை ஒழிக்கவும், அரசியல் தலையீடுகளை தடுக்கவும் உத்தரவிட வேண்டுமென மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், நேரடி கவள்முதில் நிலையங்கள் அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 29ம் தேதிக்குள் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க :துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை - ரூ. 35 லட்சம் பறிமுதல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.